அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் - இருக்கன்குடி


தல வரலாறு


   கிடைக்காத பொருளுக்காக இல்லாத இடம் தேடியலைவதே அஞ்ஞானிகளின் செயல் ஆகும். தான் வேண்டுகின்ற பொருளை தன் இடத்திற்கே வரவழைத்துப் பெறுவது ஞானிகளின் செயல் . சித்தர்களும் ஞானிகளும் தன்னுடைய உடல் பொருள் ஆவியனைததையும் பொருட்டாக கொள்ளாமல் உள்ளத்தையே விளை நிலமாக அமைத்து சிந்தனையையும் செயலையும் நீராகவும் உரமாகவும் பயன்படுத்தி பாடுபட்டுப் பலனையும் தனக்குள்ளே காணுகிறார்கள்.

   அப்படி தன் தவத்தால் மஹா சக்தி மாரியம்மனை வரவழைக்க வரம் பெற்ற மாமுனியால்தான் இருக்கன்குடி மாரியம்மன் நமக்குக்கிடைத்ததாக நூல்கள் கூறுகின்றன. மலைகள் இருக்கன்குடி மாரியம்மனாக இவ்வுலகத்திற்குக் கிடைத்த புண்ணிய புராணத்தின் மூலக்கருவே இதுதான். தான் இருந்த இடத்திலே உலகநாயகியை உறைய வைத்த பெருமை பெற்ற சித்தாpன் தவத்தால் தான் இருக்கன்குடி மாரியம்மன் வலக்கால் மடியமா;ந்து வரம் வழங்கிக் கொண்டிருக்கிறாள்..

   புகழ் மிக்க புண்ணிய ஸ்தலங்களில் தோன்றிய பெருமை இப்பாரத பூமிக்கு உண்டு. இவ்வுலகையே படைத்து காத்து இரட்சித்து வருகின்ற பிரம்மரோகத்து தெய்வங்களின் பாதங்கள் இப்பாரத பூமியில் பற்பல இடங்களில் பதித்திருப்பதாகவும் அறிந்துள்ளோம். மனிதன் தோன்றிய காரணத்தையும் வாழவேண்டிய முறைகளையும் மனித தர்மத்தை வகுத்து கொடுக்க இறைவனே மனிதனோடு மனிதனாக வாழ்ந்த பெருமையும் இந்த மண்ணிற்கு உண்டு.

மேலும் »