அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் - இருக்கன்குடி


சித்தரும் சிவாலயமும் :


   இவ்வுலகப் புற வாழ்க்கையினால் கிடைக்கின்ற அற்ப சந்தோஷங்களையும் அதனால் தொடருகின்ற நிரந்தரத் துன்பங்களையும் அறவே வெறுத்து தன்னுள் ஒளிந்திருக்கும் ஆத்மாவின் வலிமையை ஞானமார்க்கத்திற்கு செலவிட்டு மெய் வாய் கண் மூக்கு செவியெனும் ஐம்புலன்களின் அசுர பலத்தையும் அடக்கி ஞானரதத்தில் பூட்டி மெய்ஞ்ஞான உணர்வு நிலையை அடைந்து தன்னைத் தனக்குள்ளடக்கி தவம் மேற்கொண்டு தெய்வ தாயீசனம் கண்டு சித்து நிலையை அடைந்தவா;களாகியதும் சாதாரண மனிதன் சித்தராக உயர்கிறார்கள்.

  நினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்தில் சென்றடையும் சக்தியையும் இருந்த இடத்திலிருந்தே நினைத்த இடத்தில் நடைபெறும் சம்பவங்களை கண்டு தாயீசிக்கும் பாக்கியமும் பெற்று விட்டதால் அவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி ஒற்றைச் சிந்தனையில் தன்னை அற்பணித்து விட்ட பக்தனுக்குச் சிந்தையினால் தன்னை அற்பணித்து விட்ட பக்தனுக்குச் சிற்றம்பலத்தான் சேவகனாய் மாறியதாயப் புராணங்கள் கூறியுள்ளன. அத்தகைய சக்திவாய்ந்த சித்தா;கள் காடுகளடா;ந்த மலைப்பகுதியில் வாழ்நாட்களின் பெரும் பகுதியைக் கழித்து விட்டு அந்த இடங்களை விட்டு புறப்பட்டு நதியோரங்கள் கடலோரங்கள் மலையடிவாரங்கள் போன்ற மன அமைதியான இடங்களுக்கு வந்து சிறிது காலம் தெய்வ சேவை செய்கின்றனர்.

     பற்றுகளும் அதனால் விளைந்த பாவங்களும் மனிதர்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கின்ற அவலங்களை கண்டு சாகர சங்கமத்தினால் விரக்தியடைந்து வேதனைப்படும் அப்பாவி மனிதர்களின் அறியாமையைக்கண்டு அவர்கள் மீது அனுதாபம் கொண்டு பக்தியின் பரவசத்தை புதிதாகப் பரப்புகிறார்கள் . பின்பு இத்தரை மீது தன்னுடைய புற வாழ்க்கை போதுமென்றெண்ணி புமியைத்தோண்டி புதைகுழியைத் தயாh; செய்து சேமித்து வைத்திருந்த செல்வமாகிய தவப்பலனைத் தன்னுள் அடக்கி சொன்னபடி இயங்கும் சுவாசத்தை நிலை நிறுத்தி பூத உடம்பை பூவுடம்பாக்கி மண்ணுக்குள் மக்கிப்போகாத மகாநிலைக்கு தன்னை உட்படு;த்தி அடக்கி அடங்கி விடுகிறார்கள் சித்தர்கள். . இதுவே ஜுவ சமாதி நிலை என கூறப்படுகிறது..

மேலும் »
1428 பசலி ஒப்பந்தம்ஆடி பிரமோற்சவம் (10.08.2018)

வழிபாட்டு நேரம் :

திருவிழா நாட்கள் :காலை 06:00 மணி to இரவு 08:00 மணி

இதர நாட்கள்: மதியம் 01:30 மணி to மாலை 04:00 மணி