அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் - இருக்கன்குடி


கால பூஜை:


வ.எண்
விவரம்
நேரம்
1 உதய பூஜை காலை 07.00 மணி
2 கால சாந்தி பூஜை காலை 09.00 மணி
3 திருக்கால சந்தி பூஜை காலை 11.00 மணி
4 உச்சி காலம் பூஜை மதியம் 1.00 மணி
5 சாயரட்சை மாலை 06.00 மணி
6 அர்த்தஜாமம் பூஜை இரவு 08.00 மணி

வழிபாட்டு நேரம்:

ஆறுகால பூஜைகள் நித்திய பூஜைகளாக நடைபெற்று வருகின்றன. செவ்வாய் வெள்ளி ஞாயிறு ஆகிய கிழமைகளில் பக்தர்களின் தரிசன வசதிக்காக காலை நடைதிறப்பு முதல் இரவு பூஜை முடியும் வரை தொடர்ந்து சன்னதி நடை திறந்தே இருக்கும் . திருவிழா காலங்கள் தவிர இதர தினங்களில் பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை சன்னதி நடை சாத்தப்பட்டிருக்கும்.

ஓவ்வொரு பெளர்ணமி தினத்திலும் இரவு முழுவதும் பெளர்ணமி திதி அமைந்திருக்கும் தினத்தில் மாலை 6.00 மணிக்கு மேல் சிறப்பு அபிசேகமும் தொடா;ந்து சிறப்பு பூஜையும் திருக்கோயில் சார்பாக நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு வருடத்தின் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் சிறப்பு அபிசேகமும் விசேட பூஜையும் கிழ்க்கண்ட விழாக்காலங்களில் நடைபெற்றுவருகின்றன.