அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் - இருக்கன்குடிசுற்றுலா தளங்கள்:


ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயம்:

    விருதுநகரில் இருந்து 45 கி.மீ தொலைவில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. வழக்கமான அணில்களை விட பெரியதாக சாம்பல் நிறத்தில் இந்த அணில் இருக்கும். இந்த அரிய வகை அணில் இந்த சரணாலயத்தில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பறக்கும் அணில் சிங்கவால் குரங்கு யானை மான் மற்றும் பறவைகள் இங்கு காணப்படுகின்றன..

சிவகாசி:

    சிவகாசி முக்கியமான தொழில் நகரமாகும். லித்தோகிராபிக் ஆப்செட் பிரிண்டிங்கிற்கு புகழ்பெற்ற நகர். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் நகரின் முக்கிய தொழிலாகும். சிவகாசி சாத்தூர் பகுதிகளில் தீப்பெட்டி பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. ஏறக்குறைய 4500 தீப்பெட்டி தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. .

அய்யனார் அருவி:

    விருதுநகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அய்யனார் அருவி காட்டுப்பகுதியில் உள்ளது.

குகன்பாறை

    கழுகுமலையில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் வழியில் குகன் பாறை அமைந்துள்ளது. இதை ஒட்டியுள்ள கிராமமும் குகன்பாறை என்றே அழைக்கப்படுகிறது. பாறையின் அடிப்பகுதியில் ஒரு குகை உள்ளது. இதில் ஜென துறவிகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. பாறைகளில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

காமராஜர் இல்லம்:

    தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தவராவார். அவர் பிறந்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. அவருடைய புகைப்படங்கள் வாழ்க்கை வரலாறு அவர் உபயோகித்த பொருட்கள் ஆகியவற்றை இங்கு காணலாம்..

பிளவக்கல் அணை:

    பிளவக்கல் அணைப்பகுதி பொழுதுபோக்கு இடமாகும். இந்த அணை பெரியார் அணை, கோவிலார் அணை என இரு பகுதியாக உள்ளது. இயற்கை சூழ்ந்த இந்த இடத்தில் அழகான தோட்டங்கள் உள்ளன. படகு சவாரியும் உள்ளது.

குல்லூர் சந்தை நீர்தேக்கம்:

    பொழுதுபோக்கு இடமாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் பிப்ரவரி வரை ஏராளமான நீர்பறவைகளை இங்கு காணலாம்.

பள்ளிமடம்:

   குண்டாற்றின் கிழக்கு கரையில் பள்ளிமடம் அமைந்துள்ளது. 10ம் நூற்றாண்டில் சுந்தர பாண்டியன் இந்த இடத்தில் தனது உயிர் நீத்தார். அவரது சகோதரர் வீர பாண்டியன் இங்கு பள்ளிபடை என்ற நினைவு இடத்தை நிறுவினார் இங்குள்ள கோயில் கலைநாதசுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. பள்ளிப்படை என்ற சொல் மருவி பள்ளிமடம் என ஆகியது.